தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 1 October 2013

காங்கிரஸ் எம்பிக்குச் சிறைஎம்.பி.பி.எஸ் இடங்கள் முறைகேட்டு வழக்கில் சிக்கியுள்ள காங்கிரஸ் எம்பி ரஷித் மசூதுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தில்லி சி.பி.. நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இவரது எம்.பி. பதவி பறிபோகிறது.

எம்.பி.பி.எஸ் சேர்க்கை இடங்களில் மாநிலங்களவை உறுப்பினரான ரஷீத் மசூத் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. அவருடைய வயது காரணமாக அவருக்கு குறைந்தபட்ச தண்டனையோ விடுவிப்போ எதிர்நோக்குவதாக அவருடைய வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். கடந்த 19ம் தேதி தில்லி சி.பி. நீதிமன்றம் மசூத்தை குற்றவாளி என அறிவித்தது.

அதை தொடர்ந்து, அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தில்லி சி.பி. நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment