தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday 19 October 2013

அது என்ன விவகாரம்?


கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக கார்ப்பரேட் கம்பெனிகளின் இடைத்தரகர் நீராராடியாவின் உரையாடலில் பல உண்மைகள் வெளிவர துவங்கியுள்ளன. உரையாடலில் பல்வேறு ஊழல் சதித்திட்டங்கள் மூழ்கியிருப்பது குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 2ஜி ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்த சிபிஐ, மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் .ராசாவை சிறையில் தள்ளியது. பல அரசுத்துறை செயலாளர்களையும் கம்பி எண்ண வைத்தது.

ஆனால் அதிசயமாக ஊழலில் தொடர்புடைய நீராராடியாவை கண்டுகொள்ளவே இல்லை. ஊழல் வெளியான போது ராடியாவின் உரையாடலில் ஒரு பகுதி மட்டுமே வெளியே வந்தது. மீதம் முழுவதுமாக மறைக்கப்பட்டது. அதுதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் பலம் என பலராலும் விமர்சனம் செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில் உச்சநீதிமன்றமே தலையிட்டு ஏன் நீராராடியா மீது வழக்குப் பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பியது.


மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயம் செய்து அதற்குள் வழக்குப் பதிவு செய்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதுவும் 2007ல் ராடியாவின் நிறுவன வளர்ச்சியில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரிலே வருமான வரித் துறையினர் அவரது உரையாடல்களை பதிவு செய்யத் துவங்கினர். அதுவும் தொடர்ந்து பதிவு செய்யப்படவில்லை.

2007ல் இருந்து 2009ம் ஆண்டு மே மாதம் வரை குறிப்பிட்ட 180 நாட்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. அதில் இருக்கும் விபரங்களை பார்த்த உச்சநீதிமன்றமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. பதிவு செய்யப்பட்டிருக்கும் உரையாடலில் மட்டும் மிக முக்கியமான 14 விஷயங்களில் நடைபெற்றுள்ள குற்றங்களில் தொடர்பிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதில் தொடர்புடைய தனி நபர்கள், அரசு அதிகாரிகள் இழைத்த குற்றங்கள் தொடர்பாக சிபிஐ விசாரித்து டிசம்பர் 16ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. மேலும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் தொடர்புடைய விவகாரத்தை மத்திய நிலக்கரித்துறை தலைமை கண்காணிப்பு அதிகாரி விசாரிக்க வேண்டும். அதேபோல்வேறொரு விவகாரத்தைஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி  ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

வேறொரு விவகாரம் என நீதிபதிகளே வெளிப்படையாக சொல்ல முடியாத விவகாரம் என்றால், கார்ப்பரேட்களின் இடைத்தரகர்கள் எந்தஅளவிற்கு அரசின் உச்சபட்ச அதிகார மட்டத்தோடு தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆக உலகமயம் உள்ளூர்மயமாக்கப்பட்ட பிறகு, கார்ப்பரேட் நிறுவனங்கள்அரசு அதிகார வர்க்கத்தையும் இணைத்துக் கொண்டு ஊழலில் மூழ்கி முத்துக்குளிக்கின்றன. 1991 ல் துவங்கிய ஜெயின் டயரி -ஹவாலா ஊழல் தொடங்கி கேத்தான் தேசாய் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் என அணிவகுத்து வருகின்றன. இவையெல்லாம் கார்ப்பரேட்களின் கூட்டுக்கொள்ளையில் உள்ளடங்கியவையே.

இந்த ராடியாவும் உலகமயத்தால் உற்பத்தி செய் யப்படும் ஊழலுக்கான தொடர்பு கருவிதான் என் பதை நீதிமன்றமும் புரிந்து கொண்டால்தான், ஊழலின் ஆழத்தையும், ஆணி வேரையும் அடை யாளம் காண முடியும். உச்சநீதிமன்றம் குறிப்பிடும் வேறொரு விவ காரம் என எதையும் புறந்தள்ளிவிட முடியாது. அது மக்கள் மன்றத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். அதுவே எதிர்கால இந்தியாவின் நீதி, நிர்வாகத்திற்கு வலு சேர்ப்பதாக அமையும்.

நன்றி: தீக்கதிர்

No comments:

Post a Comment