தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 15 October 2013

இத்தாலியில் அதிகரிக்கும் கடன் நெருக்கடி 50 வரலாற்று சிறப்பிடங்களை விற்க முடிவு



இத்தாலியில் மீண்டும் கடன் நெருக்கடி மிகக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. இதனை சமாளித்திட அந்நாட்டில் அரசு வசம்முள்ள 50 வரலாற்று சிறப்புமிக்க இடங்களை விற்க முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் பட்ஜெட் பற்றாக்குறை என்பது அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் இத்தாலியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடுமையான நெருக்கடியின் விளைவாக பொது பட்ஜெட் பற்றாக்குறை 3 சதவிகிதத்தை விட அதிகமாக அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.

ஏற்கனவே அந்நாட்டில் நிலவி வந்த பொருளாதாரநெருக்கடியை சரி செய்திட பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுச்செலவினங்களுக்கான நிதியை வெட்டி சுருக்கப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். அரசின் நடவடிக்கையை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவான அளவிலேயே இருந்து வருகிறது. இதன் விளைவாக அந்நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.

இதற்கு அந்நாட்டின் பிரதமர் என்ரிகோ லீட்டா இளைஞர்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார். மேலும் நாட்டின் கடனை அடைத்தவுடன், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் உன உறுதிமொழி கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது இத்தாலி அரசின் கடன் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அந்நாட்டின் பொதுப்பட்ஜெட்டில் பற்றாக்குறை 3 சதவிகிதத்தை விட அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனை சமாளித்திட அந்நாட்டில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை, விற்று அரசின் கடனை அடைப்பது எனஅந்நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்கான முயற்சியில் அந்நாட்டின் கருவூலத்துறை இறங்கியிருக்கிறது. இதன் மூலம் இத்தாலி அரசிற்கு இருக்கும் கடன் அளவில் 42 கோடியே 50 லட்சம் யூரோக்களை அடைக்க முடிவு செய்திருக்கிறது. அதன்படி இத்தாலியில் உள்ள 18ம் நூற்றாண்டு அரண்மனை, மிலன் நகரில் உள்ள வில்லா மிரபிலோ, பிராக்சியானோ நகரில் உள்ள ஓர்சினி ஓடிஸ்கல்சி கோட்டை உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் விற்பதற்கான முயற்சியில் இத்தாலி அரசு இறங்கயிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை குறித்து அந்நாட்டின் சொத்து விற்பனைதுறையின் நிபுணரான, ரூபர்ட் ஃபவ்செட் கூறியதாவது,

இது போன்ற நெருக்கடியான நிலையில் எந்த ஒரு அரசாக இருந்தாலும் கடன் நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கான வழியைத்தான் தேடும் அதுதான் ஏதார்த்தம். ஆனால் இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க சொத்துக்களை பாதுகாக்க அதிக அளவில் செலவுகள் ஆகும். இதனை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்யாவிட்டால் அதனை தொடர்ந்து நிர்வாகிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படும். நாம் முன்னோர்கள் சேர்த்து வைத்த மிகப்பெரிய சொத்து, புகழ் எல்லாம் இணைந்ததுதான் இந்த வரலாற்றுச் சிறப்பிடங்கள். இதனை தனியார் நிறுவனங்கள் வாங்கலாம். அதனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது ஒவ்வொருவருக்கும் நன்மை பயக்கும். அதே நேரத்தில் அதனால் வரும் பணம் அந்த பகுதியில் உள்ளுர் மக்கள் பயன்பெறும் வகையில் அந்த மாநிலத்தின் அரசு கருவூலத்தில் போட வேண்டும் என்று கூறினார்.

No comments:

Post a Comment