தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Monday 23 September 2013

இன்டர்நெட் மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிக்கலாம்



இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் இணையதள மையங்கள் மூல மாக வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிக்கும் முறை அக்டோபர் 1ம் தேதி முதல் அமல் படுத்தப்படுகிறது. 1.1.2014ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அதாவது 1.1.1996 முன்பு பிறந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியல் :
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்பட பணிகளில் பொதுமக் களின் சிரமத்தை குறைக்கும் வகையில், இணையதளங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், மாற்றம் செய்தல் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கும் முறை கடந்த 2 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. அனைவரிடமும் இணையதள வசதி இல்லாததாலும், பெரும்பாலான மக்களிடம் இணையதள வசதி குறித்த விழிப்புணர்வு இல்லாததாலும் தமிழகத்தில் இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிக குறைவாகவே இருந்து வருகிறது.

இணைய தள மையங்கள் :
இந்நிலையில் தமிழகத்திலும் இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலுக்கு விண் ணப்பிக்கும் முறையை அதிகரிக்கும் வகையில், இணையதள மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப் படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணை யம் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்துடன் இணைத்து வாக்காளர் பட்டியல் பணி களை மேற்கொள்ள விரும்பும் இணையதள மையங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதன் படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 86 இணையதள மையங்களும், தமிழகத்தில் இருந்து 944 இணையதள மையங்களும் வாக்காளர் பட்டியல் பணியை மேற்கொள்ள விருப் பம் தெரிவித்தது.

இவ்வாறு வாக்காளர் பட்டியல் பணிகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்த இணையதள மைய உரிமையாளர்களுக்கு இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் குறித்த பயிற்சி தமிழகம் முழுவதும் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இணையதள மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது:- இந்தியாவில் கேரளா மாநிலத்தில் 75 சதவீத பேரும், ஆந்திராவில் 40 சதவீத பேரும் இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தகவல் நுட்ப தொழிற்துறையில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருந்து வரும் தமிழகத்தில் இணையதளம் மூலமாக 7.8 சதவீத பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை வாக்காளர் வரைவு பட்டியலுக்கு 2.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் இணைய தளம் மூலம் 20 ஆயிரம் பேர் தான் விண்ணப்பித்துள்ளனர்.

அக்டோபர் 1 முதல் :
இணையதளம் மூலமாக வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பம் செய்வது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்களுக்கு சிரமத்தை குறைக்கும் வகையிலும் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் இணையதள மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், மாற்றம் செய்தல் போன்ற பணிகள் வருகிற அக்டோபர் 1ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளது.

இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிப்போரின் இல்லத்துக்கு தேர்தல் அலுவலர்கள் வந்து பெயர், முகவரி உள்பட விவரங்களை சரி பார்ப்பார்கள். பணிகள் அனைத்தும் முடிவடைந்தவுடன் 40 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இவ்வாறு பிரவீன்குமார் கூறினார். இன்டர்நெட் மையங்கள் மூலம் இப்பணிகளை மேற்கொள்ளலாம். இவை இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகளாகச் செயல்பட வேண்டும். இத்தகைய நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்.

தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ள கட்டணவிகிதப்படி இதற்கான கட்டணங்களை இண்டர்நெட் மையங்கள் வசூலித்துக் கொள்ளலாம்.இப்பணிகளை மேற்கொள்ளும் இண்டர்நெட் மையங்களில் இதற்கென பதிவேடுகள் பரா மரிக்கப்படும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அந்தந்த வட்டத்திலுள்ள தேர்தல் துணை வட்டாட்சியர்களிடம் (படிவம் 6,7,8,8-) குறித்த விவரங்களை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

படிவம்-கட்டணம் நிர்ணயம் :
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6,
வாக் காளர் பட்டியலில் பெயர் நீக்க படிவம்-7,
வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை திருத்தம் செய்ய படிவம்-8
வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரி மாற்றம் செய்ய படிவம்-8.,
இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.
தவிர வாக்காளர் பட்டியலை பிரதி எடுக்க பக்கம் ஒன்றுக்கு ரூ.3ம்,
தேடுதல் பணிகளுக்கு (பட்டியலில் உள்ள பெயர், வாக்குச் சாவடி பெயர், விண்ணப்பத்தின் நிலை மற்றும் பல விவரங்கள்) ரூ.2ம்,
பிரிண்டிங் பணிகளுக்கு பக்கம் ஒன்றுக்கு ரூ.3ம்
கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தவிர புகார்களை பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இதற்கு ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும். இன்டர்நெட் மையங்களில் விண்ணப்பம் விண்ணப்பதாரர் முன்னிலையில் பதிவு செய்யப்படும். அவர்கள் முன்னிலையிலேயே சரிபார்க்கப்படும். இதனால் இதில் தவறு ஏற்பட வாய்ப்பிருக்காது.

புகைப்படங்கள் மற்றும் படிவங்கள் ஒன்றாக சேர்த்து அனுப்பப்படுவதால் இணையதள தரவில் (டேட்டா பேஸ்) தவறான புகைப்படங்கள் இணைப்பதற்கு வாய்ப்பிருக்காது.

No comments:

Post a Comment