தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday 19 September 2013

செப்டம்பர் 19 - தியாகிகள் தினம் - செவ்வணக்கம்




  “தேவைக்கேற்ற குறைந்த பட்ச ஊதியம்”
உயரும் விலைவாசிக்கேற்ப ஊதியத்தை ஈடுகட்டுதல்
பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல்
50 வயது அல்லது 25 ஆண்டு பணிக்காலம் முடித்த ஊழியர்களை
வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை கைவிடுதல்
பழி வாங்குதலைக் கைவிடுதல், பழி வாங்கப்பட்ட ஊழியர்களை
மீண்டும் பணிக்கு அமர்த்துதல்
பணிப் பாதுகாப்பு
ஒப்பந்தமுறையில் ஊழியர்களைச் சுரண்டுவதை ஒழித்தல்
தானியங்கி மூலம் ஏற்படும் ஊழியர் குறைப்பை மறுத்தல்
தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல்
முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதை நிறுத்துதல் 
          பகுதிநேர ஊழியர்களுக்கு விகிதாசாரஅடிப்படையில்          
நியாயமான ஊதியம் வழங்குதல்
ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நாள் வேலை நிறுத்தத்தை
19 செப்டம்பர் 1968 அன்று மத்திய அரசு ஊழியர்கள் நடத்தினார்கள்.
”அன்னை” இந்திரா தனது அகோர அடக்குமுறையை
ஊழியர்கள் மீது கட்டவிழ்த்து விட்டார்.
“இன்றியமையாப் பணிகள் பராமரிப்புச் சட்டம்”
(ESSENTIAL SERVICES MAINTENANCE ACT – ESMA)
போராடும் ஊழியர்கள் மீது திணிக்கப்பட்டது.
சங்கங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
காவல்துறை ஏவி விடப்பட்டு காட்டுமிராண்டித் தனமான
தாக்குதல் நடத்தப் பட்டது.
லத்தி அடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் 17 தோழர்கள் உயிரிழந்தனர்.
பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் தள்ளப்பட்டனர்.
வேலைநீக்கம் போன்ற தண்டனைகள்
பல்லாயிரக்கணக்கானோருக்கு வழங்கப் பட்டது.
இத்தனை அடக்குமுறைகளை பழிவாங்குதல்களை
தாங்கியும், தாண்டியும்
சங்கங்களின், ஊழியர்களின் உரிமைகளை நிலை நிறுத்திய
வரலாற்றுச் சிறப்பு மிக்க தினம்
செப்டம்பர் 19.
செப்டம்பர் 19 போராளிகள்
இன்று இலாகாக்களில் இல்லையென்றாலும்
இன்று நாம் அனுபவிக்கும் அனைத்துப் பலன்களும் -
அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற பரிசு தான்!
அவர்களது
நெஞ்சுரமும் நேர்மையும் அர்ப்பணிப்பும்
என்றும் நம்மை வழி நடத்திச் செல்லட்டும்!

No comments:

Post a Comment