தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 13 November 2013

ஊழியர்களின் உற்ற தோழன் - BSNLEU



நவம்பர் 6 முதல் 8 வரை நமது BSNLEU  கேரள மாநிலச்சங்கத்தின் 7 -வது மாநில மாநாடு கோட்டயத்தில் நடைபெற்றது. நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதற்குப்பின்னர் தோழர், தோழியர்களுக்கு சந்தேகங்கள், விளக்கங்கள் கேட்கலாம் என வழக்கம்போல் அறிவிக்கப்பட்டது. பலரும் தங்களது சந்தேகங்களை, விளக்கங்களை சீட்டில் எழுதி கொடுத்தனர். அதில் ஒரு சீட்டில் எழுதி இருந்ததை நமது பொதுச்செயலர் முகமலர்ச்சியோடு படிக்கிறார்.  அக்கடித வாசகம் ....
     தோழரே!,வணக்கம்.. என் மொத்த மாத சம்பளம் இப்போது அரை லட்சத்தை தாண்டிவிட்டது. நான் கனவில் கூட ஒரு நாள் என் சம்பளம்  அரை  லட்சத்தை தாண்டும்  என்று என் வாழ்வில் எதிர்பார்த்தது இல்லை. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தால்  மட்டுமே இதை சாத்தியமாக்க  முடிந்தது. எனவே, BSNL ஊழியர்களின் பாதுகாவலன், மற்றும் BSNL நிறுவன பாதுகாவலன் நமது BSNLEU சங்கத்திற்கு என்னை போன்ற அணைவரும் என்றென்றும் நன்றி கடன் பெற்றுள்ளோம்.

நன்றி: BSNLEU மதுரை மாவட்ட வலைதளம்

No comments:

Post a Comment