தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 11 February 2014

9 லட்சம் ஊழியர் ஸ்டிரைக் நாடு முழுவதும் வங்கிகள் ஸ்தம்பிப்பு



ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது. ஊதிய உயர்வு கோரி, சென்னை பிராட்வேயில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா தலைமை அலுவலகத்தில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் திங்களன்று (பிப். 10) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பாஸ்கரன் (என்சிபிஇ), சி.எச்.வெங்கடாசலம் (ஏஐபிஇஏ), நாகராஜன்(ஏஐபிஒஏ), சி.பி. கிருஷ்ணன் (பெபி), வீரபத்திரன் (ஐஎன்பிஒசி) உள்பட பலர் பேசினர். நாட்டின் விலைவாசிக்கேற்ப ஊதியத்தை உயர்த்த வேண்டும், பொதுத் துறை வங்கிகளை தனியாருக்கு கொடுக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பு சார்பில், இரண்டு நாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, திங்கள் காலை முதல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்தப் போராட்டத்தில், இந்தியா முழுவதும் உள்ள 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிக் கிளைகளில் பணியாற்றும் சுமார் 9 லட்சம் ஊழியர்கள் பங்கேற் றுள்ளனர். தமிழகத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். திங்களன்று காலை 6 மணிக்குதொடங்கிய வேலை நிறுத்தம் செவ்வாய் (பிப்.11) மாலை வரை நடைபெறும் என வங்கிக்கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையில் நடைபெற்ற வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கூட்டமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான வெங்கடாசலம், மக்கள் நலன் கருதி எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண் டும்.

இல்லையென்றால், போராட்டம் மேலும் தீவிரப் படுத்தப்படும் என்று வெங்கடாச்சலம் தெரி வித்தார். வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில், பெண் ஊழியர்கள் உள்பட சுமார் 1500 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.