தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday 3 August 2013

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்க முடிவு



அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி)
10 சதவீதப் பங்குகளை தனியாருக்கு விற்றுவிட
மன்மோகன் சிங் அரசு முடிவு செய்துள்ளது.
பொருளாதார விவகா ரங்கள் தொடர்பாக
பிரதமர் தலைமையில் வியாழன் மாலை நடைபெற்ற
மத்திய அமைச்சரவைக்குழு கூட்டத்தில்
இந்த முடிவு எடுக்கப் பட்டதாக
மத்திய நிதி அமைச்சகம் வெள்ளி யன்று
வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ளது.
தற்போதைய பங்கு வர்த்தக நிலவரப்படி
இந்தியன் ஆயில் நிறுவனத்தின்
10 சதவீத பங்குகளை விற்பதன் மூலம்
3 ஆயிரத்து 700 கோடி ரூபாயை திரட்ட முடியும்
என மத்திய அரசு கருதுகிறது.
தற்போதைய முடிவின் படி
10 சதவீதப் பங்குகளை தனியாருக்கு விற்றுவிட் டால்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கு
68.92 சதவீதமாக குறையும் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த முடிவை எதிர்த்து நாடு தழுவிய போராட் டத்திற்கு
ஏற்கெனவே சிஐ டியு உள்ளிட்ட
மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

No comments:

Post a Comment