தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 17 January 2017

ஆரோக்கியமும்! ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னணியில் இருக்கும் வர்த்தக அரசியலும், பாழாகும் நமது ஆரோக்கியமும்! இங்கு ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னணியில் புதைந்து இருக்கும் வர்த்தக அரசியலும், பாலாகும் நமது ஆரோக்கியமும் பற்றி கூறப்பட்டுள்ளது. By: Balaji Viswanath Updated: Tuesday, January 17, 2017, 11:35 [IST] Subscribe to Boldsky ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னணியில் பீட்டா மட்டும் தான் இருக்கிறதா? இந்த தடைக்கு பின்னணியில் மறைந்திருக்கும் உலக வர்த்தக அரசியலும், இதனால் பாதிக்கப்படும் நமது ஆரோக்கியம் பற்றியும் இதுவரை எந்த ஒரு மருத்துவரும் கூட வாய் திறந்ததில்லை. மேற்கத்திய மோகம், பாக்கெட்டில் அடைத்து கொடுத்தால் எதை வேண்டுமானாலும் வாங்குவோம். முதலில் இலவசமாக நம்மை அடைந்தது, பிறகு விலை குறைவானது என மருவியது. இப்போது பசும்பால் என்ற ஒன்று இருந்ததற்கான தடையமே இல்லாமல் போய்விட்டது. ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னணியில் இருக்கும் அந்த கருப்பு பக்கங்கள் என்ன? இதனால் எப்படி நமது ஆரோக்கியம் பாலாகி வருகிறது? பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் VIDEO : Top 10 Books that Should Be Movies .News Powered by வேறுபாடுகள்! நம்மில் பலருக்கு இந்திய மாடுகள் மற்றும் மேற்கத்திய மாடுகள் மத்தியில் இருக்கும் வேறுபாடுகள் தெரியாது. இப்போது நீங்கள் நமது தெருக்களில் பார்க்கும் பசு இந்திய வகையை சேர்ந்தது அல்ல. அவை மேற்கத்திய ஹைப்ரிட் பசுக்கள் ஆகும். Image Courtesy விஷத்தன்மையான பால்! இன்று நாம் குடித்து வரும் A1 வகை பால் விஷத்தன்மை கொண்டது ஆகும். இதுவே நமது இந்திய வகையை சேர்ந்த A2 வகை பால் மிகவும் பாதுகாப்பானது, ஆரோக்கியமானது. உள்நாட்டு பசுக்கள்! இந்தியாவில் உள்நாட்டு பசுக்கள் என 70 வகை இருந்தன. இப்போது நம்மிடம் இருப்பது வெறும் 30 வகை பசுக்கள் தான். இதற்கு காரணம் மேற்கத்திய மாடுகளின் வருகையும், ஹைப்ரிட் பசுக்களும் தான். முக்கியமாக நாம் பாக்கெட் பால் பயன்படுத்த ஆரம்பித்தான் விளைவு. ஜல்லிக்கட்டு தடை! ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதால், காளைகள் இனம் அழியும். காளைகள் அழிந்தால் மீதம் இருக்கும் 30 வகையிலான உள்நாட்டு பசுக்களும் அழிந்து போகும். இதனால், நாம் ஆரோக்கியமான A2 பாலை இழந்து, முழுக்க, முழுக்க மேற்கத்திய நாடுளில் இருந்து பெறப்படும் A1 பாலை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம். பி.சி.எம்.7 (BCM7) Beta-Caso-Morphin-7 என்பது தான் பி.சி.எம்.7 ஆகும். நாம் இன்று பயன்படுத்தும் பாக்கெட்டில் அடைத்து விற்க படும் பால்கள் எல்லாம் A1 பால் தான். பாலில் பொதுவாக மினரல், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் போன்றவை இருக்கும். Image Courtesy இருவகை பால்! A1, A2 என இரண்டு வகை பால்கள் இருக்கின்றன. இதன் இரண்டுக்கும் மத்தியல் பல வேறுபாடுகள் இருக்கின்றன. இவை இரண்டில் இருக்கும் புரதமே வேறுப்பட்டது ஆகும். கேசீன் புரதங்கள் பல வித்தியாசங்கள் கொண்டிருக்கின்றன. இதில் ஒரு வகை தான் பீட்டா கேசீன் இதில் A1, A2 என இரண்டு வகை இருக்கிறது. A2 பாதுகாப்பானது, இது இந்திய பசுக்களில் இருந்து கிடைக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். ஆனால், A1 -ல் இருப்பது நச்சுதன்மை கொண்டுள்ளது ஆகும்.   A1 பாலின் தீய தாக்கங்கள்! A1 பாலை பயன்படுத்துவதால் மூளை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நாள்ப்பட பாதிக்கப்படும். இதனால் ஞாபக சக்தி குறைபாடு, நோய் எதிர்ப்பு திறன் குறைபாடு, குழந்தைகள் மத்தியில் உடல் வளர்ச்சியில் குறைபாடு போன்றவை நாள்பட உண்டாகும். இதை ரஷ்யா ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். விழித்துக் கொண்ட மேற்கத்திய நாடுகள்! A1 பாலின் தீமைகளை கண்டறிந்த மேற்கத்திய நாட்டு மக்கள் இப்போது மெல்ல, மெல்ல A2 பால் பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர். இதற்கு பின்னணியில் முழுக்க, முழுக்க மறைந்திருப்பது வர்த்தக அரசியல் தான். இதன் மூலமாக இந்தியாவின் வர்த்தகம் மற்றும் இந்தியார்களின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்.

Read more at: http://tamil.boldsky.com/insync/life/2017/the-dark-secret-between-jallikattu-ban-a1-a2-milk-difference/slider-pf81649-014066.html

No comments:

Post a Comment