தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday 26 November 2015

நான் ஒரு பெருமைமிகு இந்தியன் - அமீர்கான் . . .

நாட்டில் சகிப்பற்ற தன்மை பெருகி வருவதாகவும்அதுமக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வை அளிப்பதாகவும்,பிரபல இந்தி நடிகர் அமீர்கான் கூறியிருந்த நிலையில்அதற்கு எதிர்ப்பு தெரிவித்துசங்-பரிவார் கூட்டம்நாடுமுழுவதும் கூச்சலில் இறங்கியுள்ளது.அமீர்கான் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று சிவசேனா உள்ளிட்டமதவெறி அமைப்புக்கள் வெளிப்படையாகவே மிரட்டலும் விடுத்து வருகின்றன.பா..எம்.பி.யும்இந்துத்துவவெறியைக் கிளப்பும் வகையில் தொடர்ந்து பேசி வருபவருமான யோகி ஆதித்ய நாத்,” இந்தியாவை விட்டு அமீர்கான்செல்வதை ஒருவரும் தடுக்கவில்லைமேலும் நாட்டின் மக்கள் தொகையைக் குறைக்க இது உதவும்“ என்றுவிஷத்தைக் கக்கினார்.மகாராஷ்டிர மாநில சுற்றுச்சூழல் அமைச்சரும்சிவசேனா தலைவருமான ராம்தாஸ் காதம், “அமீர்கான் இங்குஇருக்க விரும்பவில்லை எனில் பாகிஸ்தான் செல்லட்டும்என்று கூறினார். “இந்தியாவை தன்நாடாக உணராதவர்கள் தேசப்பற்று பற்றியும் ‘சத்யமேவ ஜெயதே’ பற்றியும் பேசக்கூடாது” என்று சிவசேனாவின்பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கம் சாடியது. “மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு வளர்ந்து வரும் புகழையும்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை;
அதன்காரணமாகவே அமீர் கானை தூண்டிவிட்டு இவ்வாறு அவர்கள் பேச வைத்துள்ளனர்” என்று பாஜக தலைவர்களில்ஒருவரான ஷாநவாஸ் ஹூசைன் விமர்சித்தார்.இந்நிலையில், ‘நாட்டில் சகிப்பற்ற தன்மை நிலவுகிறது’ என்ற தனதுகருத்தில் இப்போதும் உறுதியுடன்இருப்பதாகவும்தற்போது தனக்கு எதிராக கூச்சலிடு பவர்கள்தனது கருத்தைநிரூபித்து இருப்பதாகவும் அமீர்கான் பதிலடி கொடுத்துள்ளார்.மேலும்தான் ஒரு பெருமித இந்தியன் என்றும்,தனக்கோதன் மனைவிக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்றும் அவர்கூறியுள்ளார்.இதுதொடர்பாக அமீர்கான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “கடந்த காலத்திலும் சரிதற்போதும்சரி நானும் என் மனைவியும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஒருபோதும் நினைத்தது இல்லைஎனக்குஎதிராகப் பேசுபவர்கள் எனது பேட்டியை பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது வேண்டுமென்றே தவறாக பேசுகிறார்கள்என்றுதான் சொல்ல வேண்டும்என்னை தேச எதிர்ப்பாளன் என்று அழைக்கும் அனைவருக்கும் ‘நான் ஒரு பெருமைமிகுஇந்தியன்‘ என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்இதை சொல்வதற்கு யாரின் ஒப்புதலும் தேவையில்லைஏனெனில்நான் இந்தியாவை நேசிக்கிறேன்இங்கு பிறந்தது எனது நல்வாய்ப்புநான் மனம் திறந்துபேசியதற்காகஎன்னைநோக்கி சரமாரியாக கூச்சலிட்டவர்கள் அனைவருமே நான் குறிப்பிட்ட (சகிப்புத் தன்மை குறைகிறதுஎன்ற அந்தகருத்தை தான் நிரூபித்திருக்கிறார்கள்இது என்னை வருத்தமடையச் செய்கிறதுஆனால்நான் ஏற்கெனவே கூறியகருத்துகளில் உறுதியாகஇருக்கிறேன்“ என்று அந்த அறிக்கையில் அமீர்கான் குறிப்பிட்டுள்ளார்.மேலும்இந்தியா என்றஅழகான நாட்டின் ஒருமைப்பாடுபன்முகத்தன்மைமொழிகள்கலாச்சாரங்கள்வரலாறுசகிப்புத்தன்மைஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள அமீர்கான்இவ்விஷயத்தில் தனக்கு ஆதரவாகஇருந்தவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்இதனிடையேஅமீர்கானுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்படவேண்டும் என்றுவழக்கறிஞர் ஒருவர் கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

No comments:

Post a Comment