தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Sunday 11 January 2015





25 ஆயிரம் பேரின் வேலையை பறிக்க டிசிஎஸ் நிறுவனம் முடிவு

சென்னை, ஜன. 10 -
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(டிசிஎஸ்) நிறுவனம் சுமார் 25 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்வது என எடுத்துள்ள முடிவினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக எதிர்த்துள்ளது. இதில் உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்றும், டிசிஎஸ் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை முறைப்படுத்ததனிச்சட்டம் கொண்டுவரவேண் டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் தமிழ்நாடு மாநில 21வது மாநாடு சென்னையில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் மாநாட்டு வரவேற்புக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஏற்பாடுகள் குறித்து சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் சட்டமன்றக்குழு தலைவருமான அ.சவுந்தரராசன் கூறியதாவது:-
செயலற்றுக் கிடக்கும் தமிழக அரசு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக கெட்டுவிட்டது. கூலிக்கு கொலை, திருட்டு, கொள்ளை, சங்கிலி பறிப்பு போன்றவை அதிகரித்துவிட்டது. இதுகுறித்து சட்டமன்றத்தில் கேட்டால், கடந்த ஆண்டை விட குறைந்துள்ளன. புகார்கள் அனைத்தையும் பதிவு செய்வதால் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என சமாதானம் சொல்கின்றனர்; உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க மறுக்கின்றனர்.அரசு செயலற்று கிடக்கிறது என்பதை போக்குவரத்து ஊழியர்கள், சர்க்கரை ஆலை ஊழியர் போராட்டங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. நோக்கியா, பிஒய்டி, பிளக்ஸ்ட்ரான் போன்ற நிறுவனங்களில் 25ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
19வயதில் வேலைக்கு எடுத்து 25வயதில் வெளியேற்றி விடுகின்றனர். பாக்ஸ்கான் நிறுவனத்தை மூடி உள்ளனர். இதனால்நேரடியாக 1200பேரும், மறைமுகமாக ஆயிரக்கணக்கானோ ரும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.தொழிற்சாலை ஆய்வாளர், தொழிலாளர் ஆய்வாளர் போன்ற பிரிவுகள் தூங்குகின்றன. இந்தத் துறைகளின் மூலம், கடந்த 65 ஆண்டுகளில் எத்தனை முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதிலிருந்தே இதை புரிந்து கொள்ளலாம்.
தனிச்சட்டம்
டிசிஎஸ் நிறுவனத்தில் 25ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளனர். 35வயதுக்கு மேற்பட்டவர்களை குறிவைத்து வெளியேற்றுகின்றனர். தொழில்தகராறு சட்டத்தின்படி வேலையிலிருந்து நீக்க வேண்டுமெனில், நியாயமான காரணங்களை கூறி அரசிடம் அனுமதி பெறவேண்டும். புதிதாக வேலைக்கு ஆள் எடுக்கக்கூடாது. ஆனால் இங்கு வேலை இல்லை
டிசிஎஸ் ஊழியர்களுக்கு சிஐடியு ஆதரவு
புதுதில்லி : நாடு முழுவதும் ஏராளமான மையங்களில் பல்லாயிரக்கணக்கா
ன ஊழியர்களின் வேலையை பறிக்க நாட்டின் மிகப்பெரும் ஐ.டி. நிறுவனமான டிசிஎஸ் முடிவு செய்திருப்பதை இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியு) அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுச் செயலாளர் தபன் சென் எம்பி ஆகியோர் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

இது எந்தவிதத்திலும் தார்மீக நெறியற்றது என்றும் நீதியற்றது என்றும் குறிப்பிட்டுள்ள அவர்கள், வேலை பறிக்கப்படும் ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனம் மிகப்பெரும் லாபம் அடைவதற்காக இடைவிடாமல் தங்களது உழைப்பை செலுத்தியவர்கள் என சுட்டிக்காட்டியுள்ளனர். டிசிஎஸ் ஊழியர்களுக்கு ஆதரவை தெரிவித்துள்ள சிஐடியு, அவர்களுக்காக அனைத்து தொழிற்சங்கங்களும் குரல் எழுப்ப வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது

No comments:

Post a Comment